இரண்டு நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம்...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலனுக்கும் நிதியமைச்சில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ள நிலையில், எதிர்வரும் இரு தினங்களிலும் பாடசாலை முடங்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.