இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு - திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை!
இலங்கை மத்திய வங்கி அறிவித்லுக்கு அமைய 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிவித்லுக்கு அமைய 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.