தொழில்வாய்ப்பிற்காக இரண்டரை லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்!
வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக 2023 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 250,450 பேர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே அதிகமானோர் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்கு இலங்கை பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.