இரு ரயில்கள் மோதுண்டு விபத்து: 17 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பங்களாதேஷ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.