பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது - வழிபறியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள்  என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது - வழிபறியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள்  என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். 

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இந்தநிலையில், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகத்திட்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

நெல்லியடியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் இன்று (08) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.