ரஸ்யாவின் இரண்டு கப்பல்களை அழித்ததாக உக்ரைன் தெரிவிப்பு

ரஸ்யாவின் இரண்டு கப்பல்களை அழித்ததாக உக்ரைன் தெரிவிப்பு

கிரிமியாவில் ரஸ்யாவின் இரண்டு தரையிறங்கு கலங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரிமியாவில் ரஸ்யாவின் கருங்கடல் படையணி பயன்படுத்தும் இரண்டு தரையிறங்கு கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் யமல் அசோவ் என்ற இரண்டு கப்பல்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களை வரவேற்றுள்ள பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் சாப்ஸ் உக்ரைனின் யுத்தத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என தெரிவித்துள்ளார்.

1783 முதல் கருங்கடலில் ரஸ்ய கடற்படை காணப்படுகின்ற போதிலும் புட்டின் எதிர்காலத்தில் கருங்கடலில் சுதந்திரமாக உடற்பயிற்சியில் ஈடுபடமுடியாது என்பதே இந்த தாக்குதலின் செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் உக்ரைன் யுத்தத்தில் தோல்வியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.