ரஷ்யாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்யாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்யாவின் ஏ-50 ரக இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு உக்ரைன் இவ்வாறு ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஒன்-டோன் மற்றும் க்ராஸ்னோடார் நகரங்களுக்கு இடையே குறித்த விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தநிலையில் ரஷ்யாவின் இராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.