பல்கலை மாணவன் தற்கொலை; நால்வர் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை சம்பவத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயது இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி சமனலவேவ பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களில் 20 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற சமனலவேவ பொலிஸ் நிலையம் 2 ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (5) பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.