மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது!
மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
தலவாக்கலை ரயில் நிலையத்துக்கும் வட்டகொடை ரயில் நிலையத்துக்கும் இடையில் இன்று காலை ரயில் ஒன்று தடம்புரண்டதனை அடுத்து மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் இவ்வாறு தடம்புரண்டது.
இந்தநிலையில், குறித்த ரயில் வழித்தடமேற்றப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.