VAT வரி அதிகரிப்பு மின்சாரம், நீர் கட்டணங்களில் தாக்கம் செலுத்துமா?
ஜனவரி மாதம் முதல் VAT வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின்சாரம், நீர் கட்டணங்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் VAT வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின்சாரம், நீர் கட்டணங்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் VAT வரியை 18 சதவீதமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
VAT வரி தற்காலிகமாகவே அமுலில் இருக்கும் என்பதால், அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தாது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.