ஜோன் ஸினா ஒஸ்கார் மேடையில் ஏன் அரை நிர்வாணமாக தோன்றினார்? (காணொளி)

 ஹொலிவூட் திரையுலகம் உட்பட சர்வதேச திரைப்படத்துறையின் உயரிய அங்கீகாரத்தை வழங்கும் 96ஆவது ஒஸ்கார் விருது விழா நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்போது, பல்வேறு விடயங்கள் மறக்க முடியாத நிகழ்வாக இடம்பெற்றிருந்தன. 

அதில் ஒன்று முன்னாள் ரெஸ்லிங் வீரரும், ஹொலிவுட் நடிகருமான ஜோன் ஸினா அரைநிர்வாணமாக ஒஸ்கார் மேடையில் தோன்றியமையே தற்போது பல்வேறு ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

அவர் ஏன் இவ்வாறு நிர்வாணமாக மேடையில் தோன்றினார் என்பதற்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1974ம் ஆண்டு நடைபெற்ற 46ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது மறைந்த நடிகர் டேவிட் நிவென் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். 

இதன்போது ரொபர்ட் ஓபெல் என்பவர் நிர்வாணமாக மேடையின் குறுக்காக ஓடினார்.

இந்த சம்பவம் இடம்பெற்று 50 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டே ஜோன் ஸினா அரை நிர்வாணமாக மேடையில் தோன்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவர் முழு நிர்வாணமாக தோன்றவில்லை என்றும், குறைந்தபட்ச ஆடையை அணிந்திருந்தார் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் உறுதி செய்திருக்கின்றன.