மற்றுமொரு பேருந்து விபத்து: பொலிஸார் விசாரணை

ருவன்வெல்ல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை நோக்கிச்சென்ற பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.