அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் சாதனை!

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் சாதனை!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டியில் மட்/மட்/மஹாஜனகல்லூரி மாணவிகள் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தையும், மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினையும் பெற்றனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி -2023 இல் 1001 இற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான (தனி இசை-ஜாவளி) போட்டி நிகழ்வில் செல்வி வென்னி சஞ்சனா தேசிய மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றார். 

அவருக்கான சான்றிதழ் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.

அவரை பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி. R. ஜெயக்குமார் ஆசிரியைக்கும் கல்வி அமைச்சினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி -2024 இல் 1001 இற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டி நிகழ்வில் (தனிஇசை-ஜாவளி) செல்வி எட்வேட் கதாதரி 2ம் இடத்தினை பெற்றார். 

அவருக்கான சான்றிதழ், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

இச் சான்றிதழ்களை மட்/மட்/மகாஜன கல்லூரி அதிபர் திரு. சதாசிவம் சாந்தகுமார் வழங்கி வைத்தார்.