நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் வெடிவிபத்து - இருவர் பலி!
அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மகிழுந்து ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.