வவுனியாவில் 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை!

வவுனியா சிதம்பரம் முருகனூர் கிராமத்தைச் சேர்ந்த அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை!

வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை இதனை அடுத்து அவரின் மனைவியால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிற சரம் மற்றும் ரோஸ் நிற சட்டையும் அணிந்திருந்தார்.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.