இலங்கையில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்
இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் 16 அதிர்வுகள் பதிவாகின.
எனினும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம தெரிவித்தார்.
அத்துடன், 2021இல் 18 நில அதிர்வுகளும், 2022ம் ஆண்டில் ஐந்து அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
'இந்தோ-அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவில் இலங்கை உள்ளது.
எனவே நில அதிர்வுகள் ஏற்பட்டு தட்டின் இரு மூலைகளிலும் உள்ள நாடுகளை பாதிக்கிறது.
எனவே இலங்கையில் அதிக அளவிலான நில அதிர்வுகள் பதிவாக வாய்ப்பில்லை என்றும் அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மிகத் தெளிவான பதிவுகள் 2012 இற்கு பின்னரே உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.