இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக நாடு கடத்தப்படுவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக நாடு கடத்தப்படுவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக நாடு கடத்தப்படுவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

குறித்த விடயம் தொடர்பான பணிப்புரை இன்று காலை அந்த திணைக்களங்களுக்கு விடுக்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். 

 இந்தநிலையில், மலேசியா ஊடாக குறித்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்காக அவர்களது பெற்றோர்களினால் தரகர்களுக்கு, 75 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள் நாடுகடத்தப்படும் விடயம் தொடர்பாக நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்டதன் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதுவரை 13 சிறுவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.