செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இரத்தினபுரியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த 38 வயது தாயும் அவரது 18 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
தாயும், மகளும் செல்ஃபி எடுக்க முயன்றபோது ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதன்போது உயிரிழந்த தாயில் இளைய பிள்ளை காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.