ஒரு தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதை மானமுள்ள மறத்தமிழன் எவனும் செய்யமாட்டான்

ஒரு தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதை மானமுள்ள மறத்தமிழன் எவனும் செய்யமாட்டான்.

தமிழர் வரலாற்றின் விடுவிக்கப்பட முடியாத சிறைக்கைதியாக பா.ரஞ்சித்தையும்
அது சேர்த்துக்கொள்ளப் போகிறது.

தன்மானமுள்ள தமிழன் எவனும் முத்தையா முரளிதரனின் தமிழினத்திற்கு எதிரான விரோதப்போக்கை கடந்துசெல்லமாட்டான்.

வினாயகமூர்த்தி முரளிதரனும் (தமிழினத்துரோகி - கருணா) முத்தையா முரளிதரனும் தமிழர் வரலாற்றில் படிந்துவிட்ட கறைகளே.இதனை எந்த ரஞ்சித்துகளாலும் கழுவித்துடைத்துவிட முடியாது.

அப்படியானவர்களுக்கு வரலாறு தனது தீர்ப்பை வழங்கியே தீரும்.

தனது சொந்த இனம் செத்தழிந்து கொண்டிருந்த போது அதுபற்றி  எதுவித கரிசனையுமற்று சுயநலத்துக்காய் சிங்களத்தோடு இணைந்து கூலிக்கு கிரிக்கெட் ஆடிய ஒரு தமிழின விரோதியே முத்தையா முரளிதரன்.

சிங்களம் எம்மக்களின் தலைகளில் குண்டுகளைப் போட்டுக்கொண்டிருந்தபோது
எங்களுக்காக தமிழகம் தீக்குளித்தது.
எங்களுக்காக தமிழகம் அழுதது.

ஆனால் அதெல்லாம் இந்த இனவிரோதி முரளியின் காதுகளை எட்டவில்லை.

போர் நிறுத்தம் வேண்டி எம்மக்கள் உலகெங்கும் வீதிகளை வழிமறித்துப் போராடிக்கொண்டிருந்த வேளை  ஐபிஎல் கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தி சிங்களத்துக்கு பெருமைசேர்த்துக்கொண்டிருந்தார் இந்த சிங்களத்தமிழன்.

ஒரு தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்குவதை மானமுள்ள மறத்தமிழன் எவனும் செய்யமாட்டான்.

பா ரஞ்சித் 
@beemji
 அவர்களே..!

படப்பிடிப்பு என்பது உங்கள் தொழில். உங்களது தொழில் தர்மத்தை நீங்கள் கடைப்பிடியுங்கள்.

ஆனால் ஈழத்தமிழின வரலாறும் தமிழர் அறமும், தர்மமும் உங்களைத் தூற்றுவதிலிருந்து நீங்கள் ஒருபோதும் விடுபடமுடியாது.

புலவர்.
@RiseOfLtte