ஈழத் தமிழர்களின் தேசம் - அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது!

ஈழத் தமிழர்களின் தேசம், அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர்களின் தேசம் - அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது!

அந்த அரசாங்கத்தின் பிரதானி வீ ருத்திரகுமாரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

2021 செப்டம்பர் 23ஆம் திகதியன்று அன்று திம்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட “பொதுக் கோட்பாடுகளே” அரசியல் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் அரங்கேறிய "இமாலய பிரகடனம்" சிறிது கூட நகரப்போவதில்லை" என்றும் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

இந்தநிலையில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்திய அரசியல் கட்சிகளை வற்புறுத்துவது மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், தமிழர் ஆதரவு நிலைப்பாடுகளை சேர்க்கும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில், ஈழத் தமிழ் மக்கள் மூலோபாய ரீதியாக முக்கியமான மக்கள் என்ற கண்ணோட்டத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

காஸா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன

எனவே சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் காலத்தின் அழைப்பு என்று ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.