உயிர் காத்த கஞ்சி வழங்கிய பெண்கள் மிலேச்சத்தனமாக கைது
முள்ளிவாய்க்கால் நினைவை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆலயம் ஒன்றில் கஞ்சிகாய்ச்சி கொடுத்தமையினால் மூன்று பெண்களை சம்பூர் பொலீசார் இரவு 8:45மணியளவில் மிலேச்சத்தனமாக கைது செய்துள்ளனர். இன்று மாலை அளவில் கஞ்சி வழங்க வேண்டாம் என்று மக்களை அச்சுறுத்தி இருந்த காவல்துறையினர் இருள் வேளையில் குறித்த பெண்களை கைது செய்துள்ளனர். காளிராஜா சுயானீ கமலேஷ்வரன் விஜிதா கமலேஸ்வரன் தேன் நிலா 22 வயது மாணவி சம்பூர் என்னும் பெண்களையே கைது செய்துள்ளனர். இந்த கைதை அடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இரவைக் கழிக்கிறார்கள்.