தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியின் சந்திப்புக்குப்பின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.