சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட 4 பேர்
மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க புளோரிடா கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் சுமார் 6 மாதங்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
உக்ரைனில் யுத்தம் நடைபெறும் நிலையிலும், சில விடயங்கள் குறித்த ஆய்வினை அமெரிக்கவும், ரஷ்யாவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இவர்கள் அங்கு தங்கியுள்ள காலப்பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.