16 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல் - 707 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
16 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டவருக்கு 707 ஆண்டுகள் சிறை தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் 34 வயதான மாத்யூ ஜாக்ரஸ்யூஸி (Matthew zakrzewsi) குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் நபராக பணியாற்றி வருகிறார்.
இவரின் கண்காணிப்பிலிருந்த குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தொடர்ந்து குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில் முடிவில் இவர் மீதான 34 பாலியல் வன்கொடுமை முறைப்பாடுகள் உறுதிசெய்யப்பட்டன.
அதில் 14 வயதிற்கும் குறைவான சிறுவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், இவரின் கண்காணிப்பில் இருந்த 16 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 17 சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களைக் காட்டியதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மாவட்ட நீதிமன்றினால் அந்த நபருக்கு 707 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபர் பாலியல் ரீதியான மனநோயினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவிக்கப்படுகிறது.
அவரின் வீட்டைச் சோதனை செய்ததில், கணினியில் மனநோய்க்கான புத்தகங்களும், குழந்தைகளிடம் அத்துமீறும் செயலை காணொளியாகவும் பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.