கோதுமை மா இறக்குமதி அனுமதிப் பத்திர முறை இரத்து!

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா இறக்குமதி அனுமதிப் பத்திர முறை இரத்து!

ஒரு கிலோகிராம் கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த வரி வீதம் 11 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது, 6 ரூபாய் வரியை அறவிட நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய நடைமுறை காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதன்மூலம் இறக்குமதி கட்டுப்பாட்டை ஏற்படுத்தவே எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோதுமை மா இறக்குமதி அனுமதி பத்திர முறையை இரத்து செய்து, முன்னதாக அமுலில் இருந்த முறைமை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அத்துடன், கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு கோதுமை கருவை இறக்குமதி செய்ய வாய்ப்பளித்து பெரும் லாபம் ஈட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.