தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி!
தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி இந்த பாம் எண்ணெய் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், இவை சந்தைக்கு விடப்பட்டதன் பின்னர், தேங்காய் எண்ணெயில் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாம் எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்தால், நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை பராமரிக்க முடியாது கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3,849 மெற்றிக் தொன் எண்ணெய் கைத்தொழில் அமைச்சின் அனுமதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியினை பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.