வாலுடன் பிறந்த குழந்தை -ஆச்சரியத்தில் மருத்துவர்கள்
சீனாவில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Tethered Spinal Cord எனப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாலில் எந்தவித அசைவும் இருக்காது எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.