சுரங்கப்பாதையில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று காலை நிலச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சுரங்கப்பாதையில் பலர் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் 24 மணிநேரத்தை தாண்டியும் நீடிக்கிறது. 

சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியாததால் பதற்றம் நீடிக்கிறது.

இமயமலை மாநிலமான உத்தரகாண்ட்டில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. 

உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா- தண்டல்கான் கிராமங்களை இணைப்பதற்காக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.

இதனையடுத்து சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அங்கு நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்ட் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கியவர்கள் பீகார், இமாச்சல், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஜேசிபி, இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.