தனியார் கல்வி நிலையத்தில் மோதல்!

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.