நாட்டின் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் விளக்கம்!

நாட்டின் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் விளக்கம்!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி விளக்கம் அளித்துள்ளார்.

180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் நாற்பது வகையான மருந்துகளுக்கு மாத்திரமே பற்றாக்குறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மருந்துகளின் பற்றாக்குறை பல ஆண்டுகளாகவே இருப்பதாகவும் பொருளாதாரப் பிரச்சினைகளின் பின்னர் , மருந்துகளின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக சுமார் 150 முதல் 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கும் எனவும்

இந்தப் பற்றாக்குறை முழு நாட்டிலும் ஏற்படவில்லை, ஆனால் நமது பிரதான களஞ்சியசாலையில் ஏற்படுகிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், இதற்குக் காரணம், ஒரு மருந்து இலங்கைக்கு வந்த உடனயே, அதை விரைவாக விநியோகிக்கவே எதிர்பார்க்கப்படுகின்றதுடன் வைத்தியசாலை மட்டத்தில், சுமார் நாற்பது மருந்துகளின் பற்றாக்குறை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் , இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி, பிரதான மருந்துக் களுஞ்சியசாலையில் பாதுகாப்பான இருப்பைப் பராமரிப்பதாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.