வடக்கு - கிழக்கு மீள்குடியேற்றம் 03 வருடங்களுக்குள் பூர்த்தியாகும் - இலங்கை அரசாங்கம்
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்த 917,143 பேர் அந்த மாகாணங்களில் ஏலவே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, 1,701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேரே இன்னும் எஞ்சியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.