ரஜினி பிறந்த நாளில் கூலி திரைப்பட அப்டேட்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ரஜினி பிறந்த நாளில் கூலி திரைப்பட அப்டேட்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் இன்று (12) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில், கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். 

40 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ் – ரஜினிகாந்த் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் மலையாள சினிமாவில் இருந்து சௌபின், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ள நிலையில், தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் கேரக்டர் பெயர்கள் வெளியிடப்பட்டது. 

இதில் சௌபின் தயால் என்ற கேரக்டரிலும், நாகர்ஜூனா சைமன் கேரக்டரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும், சத்யராஜ் ராஜசேகரன் என்ற கேரக்டரிலும், உபேந்திரா காலீஷா என்ற கேரக்டரிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் தேவா என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, இன்று (12) ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, கூலி படத்தின் அப்டேட் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.