பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
பொலிஸார் தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்றைய தினம்(29) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கம் பிறப்பித்த வற் வரி அறவீடு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைதி வழியில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்காக குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளினால் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சட்டத்தரணி சம்பத் விஜேவர்தன ஊடாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக புறக்கோட்டை,குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிடிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்,பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.