கம்பஹா - கடுவெல கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கம்பஹா - கடுவெல கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கம்பஹா வலய கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல மற்றும் களனி கல்வி வலய பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலய கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.

இதுதவிர, கனமழை காரணமாக அத்தனகலு ஓயா நிரம்பி வழிவதால் கம்பஹா நகரின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.