டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில் 3.4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், உணவு பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் மறை 3.6 சதவீமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 0.3 சதவீமாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் உணவல்லாப் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 6.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.