கொல்கத்தா அணி வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் ஆகிய அணிகள் மோதின .
போட்டியின் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் 209 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.