கடன் வட்டி வீதங்கள் குறித்த மகிழ்ச்சியான செய்தி -இலங்கை மத்திய வங்கியின் திட்டம்!
கடன் வட்டி வீதங்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 3 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடன் வட்டி வீதங்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 3 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், நாணய கொள்கை தளர்வில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பான சுற்றுநிரூபம் இன்று வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சில இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், இறுக்கமான நிதி நிலைமைகள் காரணமாக இறக்குமதி தேவை குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அதேநேரம், 2023ஆம் ஆண்டில் இலங்கை பணியாளர்களின் ஊடாக ஈட்டும் அந்நிய செலாவணி 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சுற்றுலாத்துறையின் வருமானம் 2.3 பில்லியனை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.