ரயில்வே பருவச்சீட்டை இரத்து செய்யவும், கட்டணத்தை அதிகரிக்கவும் யோசனை!

இலங்கையில் எதிர்காலத்தில் ரயில்வே பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பருவச்சீட்டை இரத்து செய்யவும், கட்டணத்தை அதிகரிக்கவும் யோசனை!

ரயில்வே திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையிலான பேச்சுவாரத்தையின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டால் மாத்திரமே, இந்த யோசனை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

தற்போது ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் ரயில்வே பருவச்சீட்டை இரத்து செய்வது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், ரயில் பருவச்சீட்டினை இரத்து செய்வதன் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றும் யோசனையுடன், இந்தியாவின் முன்னணி வர்த்தகர்கள் ரயில் சேவையில் முதலிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.