நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.