சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் ஆராய விசேட மேற்பார்வைக்குழு முன்மொழிவு!

சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு

சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் ஆராய விசேட மேற்பார்வைக்குழு முன்மொழிவு!

சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வித் துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது புலப்பட்டது.

கல்வித் துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நாடாளுமன்றில், கூடியது.

இலங்கையில் செயற்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பிலும், அந்தப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரம் என்பவற்றை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி ஆலோசனை சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்து, ஆராயப்பட்டுள்ளதுடன், அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.