இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி கண்டி பல்லேகலைக்கு மாற்றம்!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி கண்டி பல்லேகலைக்கு மாற்றம்!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் கண்டி பல்லேகலை மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது கண்டி பல்லேகலை மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.