துப்பாக்கி சுத்தப்படுத்தும் தருணத்தில் பொலிஸார் காயம்!

துப்பாக்கி சுத்தப்படுத்தும் தருணத்தில் பொலிஸார் காயம்!

மொனராகலை - ஒக்கம்பிடி பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் துப்பாக்கியை பராமரிக்கும் செயற்பாட்டில் இன்று, முற்பகல் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கி இயங்கியுள்ளது.

இதன்போது, அருகில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.