இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (18) சற்று உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 296.82 ரூபாவாகவும், 305.19 ரூபாவாகவும் உள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (17) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 296.86 ரூபாவாகவும், 305.23 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அதன் மதிப்பு சரிந்துள்ளது.