தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் - நாடாளுமன்றில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்!

தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் - நாடாளுமன்றில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்!

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலை விட அதிகமான ஆதரவு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்து பெரும்பான்மை அமைப்பார். 

அநுர முன்னிறுத்தப்போகும் படித்த, நேரடி குற்றப்பின்னணி இல்லாதவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் போகிறார்கள்.

இப்போதிருக்கும் பெரும்பாலான குற்றப் பின்னணி உள்ள சிங்கள பழைய அரசியல் வாதிகள் வீடு செல்லப்போகிறார்கள்.

சிங்களவர்கள் சிந்திக்கத்தொடங்கி விட்டார்கள்.

தமிழர்கள் நாம் என்ன செய்யப் போகிறோம்?

அதே பழைய அரசியல்வாதிகளையே பூசி மெழுகி வைத்திருக்கப் போகிறோமா?

இப்போதிருக்கும் அத்தனை எம்பிமாரும் வீடு போகட்டும். அவர்கள் எம்பியாக இருந்து எதுவுமே செய்யவில்லை.

அவர்களுக்குத் விருப்பம் என்றால் கட்சி உறுப்பினராக இருந்து புதியவர்களை முன்னிறுத்தட்டும்.

தமிழர்கள் இப்போது எடுக்க வேண்டிய முடிவுகள்!!

1. இப்போதிருக்கும் எந்த தமிழ் எம்பிக்கும் வாக்குப் போட மாட்டோம்.

2. ஆகக்குறைந்தது ஒரு பட்டமாவது எடுத்தவருக்குத்தான் வாக்கு போடுவோம்.
பட்டம் பெற முடியாது போனவர் என்றால் ஏதாவது தொழில்துறை டிப்ளோமாவாவது செய்தவராக இருக்க வேண்டும்.

அல்லது தனியாக ஒரு தொழிலை தொடங்கி சாதித்தவராக இருக்க வேண்டும்.

3. அவர் வெளிப்படையாக எந்த ஊழலும் குற்றச்சாட்டும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

4. அவர் ஏற்கனவே களத்தில் ஏதாவது சமூகம் சார்ந்து செயற்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்த அனைத்தையும் நிறைவு செய்யும் வேட்பாளரே வரும்கால எம்பியாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு தமிழனும் ஆசைப்படுங்கள்.  

நாமும் மாற்றத்தை நோக்கி நகர்வோம்.

நானறிந்த வகையில் அடுத்து தமிழர் சார்பாக எம்.பி ஆக தகுதியானவர்கள் என்று நான் நினைப்பவர்களை தகுதியான காரணங்களுடன் தனித் தனிப்பதிவாக இடப்போகிறேன். 

அவை என் விருப்பமாக இருக்கும். அதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் நாம் மாற வேண்டும் என்று உறுதியாக இருங்கள்.

உங்கள் விருப்பங்களையும் என்னைப்போல பொதுவில் அறிவியுங்கள். உங்கள் தெரிவுகளையும் அறிவியுங்கள். 

எல்லோரும் பொதுவெளியில் கதைக்கத் துணிந்தால் நம்மிலும் மாற்றம் வரும்.

உங்களுக்கு பிடித்த யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஏற்கனவே உள்ள யாரும் வேண்டாம்.

இந்தநிலையில், தற்போதைய நாடாளுமன்றம் ஒழுக்கமற்றவர்களின் கூடாரமாக மாறியுள்ளது.  

என​வே, எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு  தேர்தல் நடத்தப்படும் என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, தென்னிலங​்கை என அ​னைத்து பாகங்களும் ஒரே நேர்த்தியான ஆட்சியை நிலைநாட்டவே தான் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போ​தைய நாடாளுமன்றத்தில் தரக்குறைவாக உரையாற்றுகின்றனர்.

கப்பம் ​பெற்றுவிட்டு சிறைக்கு சென்றவர்கள், கொலைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள், கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என ஒழுக்கமற்றவர்களின் கூடாரமாக நாடாளுமன்றம் மாறியுள்ளது.

இப்படியான நாடாளுமன்றம் ஒன்று இலங்கைக்குத் தேவையில்லை.

எனவே, விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய நாடாளுமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.