வறுமையை ஒழிக்கும் மக்கள் மயமான தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் வெளியிட்டு இருக்கின்றோம் - சஜித் பிரேமதாச!
குறுகிய காலத்துக்குள் உருவெடுத்த மிகப்பெரிய அரசியல் சக்தியால் உயிரிலும் ஓம்பப்படும் புத்தபெருமானினதும், மகாநாயக்க தீரர்களினதும் ஆசீர்வாதத்துடன் சமூகமயமான தலைமைத்துவத்துடன் அனைவரையும் வெற்றி பெறச் செய்கின்ற திட்டங்கள் உள்ளடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றோம். நிபுணர்கள், தொழில் வல்லுனர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நாட்டில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை காணப்படுகின்ற இலஞ்சம், ஊழல், திருட்டு என்பனவற்றை ஒழித்து மக்களை பாதுகாக்கின்ற யுகத்தை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவோம் என தலதா மாளிகை முன்னிலையில் உறுதிமொழி அளித்திருக்கின்றோம். நம்மிடம் ஜனரஞ்சகமான தத்துவமும் திறமையான சிறந்த குழுவும் இருக்கின்றது. விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறியவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களை பலப்படுத்தும் நோக்கில் இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உடனே இந்த மண்ணுக்கான நிதர்சனத்தை உண்மைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 25 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பூகொட நகரில் நேற்று (29) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரகஞ்சம், மூச்சு ஆகிய செயற் திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான சேவைகள் மேற்கொள்ளப்பட்டமை இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த அரசாங்கத்தால் மக்களுக்கான கடவுச்சீட்டுகளைக் கூட முறையாக வழங்க முடியாதுபோயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கௌரவமான நாட்டைக் கட்டி எழுப்புகின்ற
"அனைவருக்கும் வெற்றி" விஞ்ஞாபனத்தின் ஊடாக தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி, வறுமையைப் போக்கி, பெருமைமிக்க நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.