தமிழ் ஈழம் அமையப் பெற வேண்டும் இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்

தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் என்ற ஒரு நாடு அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டினுடைய முன்னணி இந்து மத குருமார்களில் ஒருவரான மதுரை ஆதீனம் நேரடியாக இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் . 

 

  இன்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ  ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை இந்தியாவின் பிரதமருக்கும் புதிய அரசுக்கும் விடுத்தார். 

 

 முதலாவதாக இலங்கையில் இனியும் எஞ்சி இருக்கக்கூடிய தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் 

இரண்டாவதாக தமிழர்களின் மீனவர்களின் நலன்களை காக்க கச்சை தீவு மீட்கப்பட வேண்டும் என்றும் இந்த இரண்டையும் தான் நேரில் டில்லியில் பிரதமர் மோதியை சந்தித்து வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் .

அது மட்டுமல்லாமல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பதற்கு அல்லது லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று குவிக்கப்படுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்  . தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சைவ மடங்களில் மதுரை ஆதீனம் முன்னணி ஆனது .