ரயில் பாலமொன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 26 பணியாளர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில் பாலமொன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 26 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மிசோரமில் உள்ள சாய்ராங் நகரில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் இந்தியாவின் ரயில்வே ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பாலம் இடிந்து விழும்போது குறித்த இடத்தில் 40 பணியாளர்கள் வரை இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுலா மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மிசோரத்தை, நாட்டின் மற்றைய பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.