ஜனக்க ரத்நாயக்கவிடம் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 15 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதானவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சந்தேகநபரிடம் இருந்த 12.24 கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி தம்மை அச்சுறுத்தி 15 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தார்.