அங்கொடையில் கப்பம் கோரி அச்சுறுத்தியவர் கைது!
அங்கொடை பிரதேசத்தில் ஒருவரை அச்சுறுத்தி 5 கோடி ரூபாயை கப்பமாக பெற முயற்சித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையில் காணி பிரச்சினை தொடர்பாக முறுகல் நிலவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அங்கொடை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய சந்தேக நபரே கைதாகியுள்ளார்.