லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குட்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு தனது எதிா்ப்பை தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இந்த மாவட்டங்களை உருவாக்க அந்நாட்டில் ஆட்சிபுரிந்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக டில்லியில் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையில், ‘ஹோட்டனில் 2 புதிய மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குட்பட்டவையாகும். இந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கவில்லை.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் திட்டங்கள்!

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்!

லாஃப் எரிவாயு விலை திருத்தம் திங்களன்று!

புதிய மாவட்டங்களை உருவாக்குவது அந்த நிலப் பகுதிகள் மீதான நமது இறையாண்மை குறித்து இந்தியா நீண்டகாலமாக கொண்டுள்ள ஸ்திரமான நிலைப்பாட்டை பாதிக்காது. அத்துடன் அது சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூா்வ அந்தஸ்தை வழங்கிடாது. 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு ராஜீய வழியில் சீனாவிடம் இந்தியா கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது’ என்றாா்.

இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு டிரில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 இலட்சம் கோடி) செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

இமயமலைப் பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பங்களாதேஷில் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.

இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும். இதனால் எல்லை பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படுவதுடன், அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பிரம்மபுத்திரா நதிநீரைப் பயன்படுத்தும் உரிமை இந்தியாவுக்கும் உள்ளது. இதனால் சீனாவில் பாயும் அந்த நதியில் மிகப் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதுகுறித்து ராஜீய அளவில் தமது கருத்துகளையும் கவலைகளையும் அந்நாட்டுக்கு இந்தியா தொடா்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

அணை கட்டுமானத்தில் சீனாவை தவிா்த்து பிரம்மபுத்திரா நதி பாயும் பிற பகுதிகளின் நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளுக்கு சீனாவின் நடவடிக்கைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மூலம் இந்திய நலன்களைப் பாதுகாக்கும்’ என்றாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, அங்கு இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களைக் குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.

எல்லையில் உள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் 4 ஆண்டுகளுக்குப் பின்னா் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்புப் பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம் சீன தலைநகா் பெய்ஜிங்கில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.

5 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய-சீன எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தைப் பராமரித்தல், எல்லை பிரச்சினைக்கு நியாயமான, இருதரப்பும் ஏற்கும் தீா்வைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், இரு நாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த இருதரப்பு உறவை மீண்டும் சுமுக நிலைக்கு கொண்டுவருதல் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இந்தச் சூழலில், சீனாவின் 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்பால் மீண்டும் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும்…

கடந்த வருடத்தில் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவு!

கடந்த வருடத்தில் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவு!
is-there-an-undeclared-emergency-in-tamil-nadu-ask-cpm-k-balakrishnan